திட்டமிட்டபடி ஜனவரி 27இல் சசிகலா விடுதலை என்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா 27ஆம் தேதி விடுதலை ஆக இருக்கிறார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 27ஆம் தேதி விடுதலை சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்படுவதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சசிகலாவிடம் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து பெற்ற பட்டு போலீஸ் பாதுகாப்புடன் திரும்புவார் . பிப்ரவரி 2 அல்லது 3ஆம் தேதி சென்னை வருவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் 3ஆம் தேதி அண்ணா நினைவு நாள் அன்று சென்னை திரும்புவார் என்றும், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.