Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸை முந்தும் ராய்..!!

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் வெற்றிபெறுவதில் கடும் சவால் நிலவுவதாகக் கூறுகின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. ரகுபர் தாஸ் முதலமைச்சராக உள்ளார். இவர் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் களம் காண்கிறார். இந்தத் தொகுதி பாஜகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஆகவே இங்க நின்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் ரகுபர் தாஸ் இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தார். அவருக்கு எதிர்ப்பு உள்கட்சியிலேயே கிளம்பியுள்ளது.

அவரை எதிர்த்து சர்யு ராய் களம் காண்கிறார். இவர் அப்பகுதியில் பாஜகவின் தீவிர முகமாகப் பார்க்கப்படுபவர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சர்யு, ரகுபர் தாசை எதிர்த்துப் போட்டியிடுகிறார். சர்யு, ரகுபர் தாஸ் அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர். இதனால் மக்களிடையே நன்கு அறிமுகமான தலைவர். ஜாம்ஷெட்பூர் தொகுதியில் சர்யு களம் காண்பதால் அத்தொகுதியில் ரகுபர் தாஸ் வெற்றிபெறுவது மிகவும் கடினமாக இருக்கும் எனக் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |