Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சொல்வது போல …… அஜீத் சொல்வது போல …… விவேக் அசத்தல் ட்வீட் …!!

நடிகர் விவேக் அஜித் , விஜயை சுட்டிக்காட்டி நடிகரும் , இயக்குனருமான சேரனை பாராட்டியுள்ளார். 

நடிகரும் , இயக்குனருமான சேரன் தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது.. சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற பதிவை பதிவிட்டிருந்தார்.

இதையே ரி_ட்வீட் செய்த நடிகர் விவேக் சேரன் சார்! உயர்ந்த நேர்மறைகளை பதிவிட்டு, எதிர்மறைகளை அலட்சியப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். நாய்கள் குரைப்பதற்காக கார்கள் நிற்பதில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் சேரன் சார்! நீங்கள் மிக சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல் “ ignore negativity”. அஜீத் சொல்வது போல் “ let go”. நல்ல கருத்தினை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். Peace to all. என்று தல , தளபதி ஸ்டைலில் விவேக் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |