சிறுமியை காதலித்து நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நியூ டவுன், ஹாஜி முகமது தெருவில் கரிம்கான் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் பைசல்கான் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது பைசல்கான் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரது வீட்டில் இருந்த 8 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
இதனையடுத்து சிறுமி நகை மற்றும் பணத்தை பைசல்கானிடம் திருப்பி கேட்டபோது தர மறுத்து அவரது நண்பர்களை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பைசல்கானை கைது செய்தனர்.