Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான கிராமத்து மீன் குழம்பு … சுவையோ அதிகம் …!!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சூடான ருசியான கிராமத்து மீன் குழம்பு …! 

தேவையான பொருட்கள் :

மீன்   –  1 கிலோ
சின்ன வெங்காயம்  –  15
பூண்டு  –  10 பள்ளு
பச்சை மிளகாய்  –  5
சோம்பு  –  1 ஸ்பூன்
மிளகு  –  1 ஸ்பூன்
தக்காளி – 3
மிளகாய் தூள் –  2 ஸ்பூன்
குழம்பு தூள்  –  2 ஸ்பூன்
மஞ்சள் தூள்  -1 ஸ்பூன்
துருவிய தேங்காய் –  2 கப்
புளி  – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு  –  தேவையான அளவு
கறிவேப்பிலை  – தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஓரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 10 சின்ன வெங்காயம் , 6 பூண்டு , 5 பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இதனுடன் சோம்பு, மிளகு, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இது நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள், குழம்பு தூள், மஞ்சள்தூள், துருவிய தேங்காய், சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடிபிடிக்காமல் கிண்டி இதனை எடுத்து  அரைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெந்தையம்,  3காய்ந்தமிளகாய் சேர்த்து பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ,நசுக்கிய பூண்டு, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கியவுடன், அரைத்து வாய்த்த மசாலாவையும்,தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  இதனுடன் மீனை சேர்த்து அது வெந்தவுடன் இறக்கவும்.  நாவிற்கு விருந்தளிக்கும் சுவையான மீன் குழம்பு ரெடி.

Categories

Tech |