Categories
மாநில செய்திகள்

அசத்தலான பிளான் போட்ட கனிமொழி…. திமுகவின் மகளிர் அணிக்கு சரவெடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பின் திமுக ஆட்சியை கைப்பற்றி முதல்முறை மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுள்ளார். இவரது தலைமையில் சிறப்பான ஆட்சியை வழங்குவதற்கு திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திமுக பலவீனமாக உள்ள கொங்கு மண்டலத்தில் உதயநிதி அல்லது கனிமொழியை பொறுப்பாளராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனிடையில் கட்சிக்குள் உதயநிதி ஸ்டாலினின் எழுச்சி, தூத்துக்குடிக்குள் முடக்கப்படும் கனிமொழி என திமுகவிற்குள் சர்ச்சைகளும் எழாமல் இல்லை.

இதுதொடர்பாக வெளியான தகவலில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ’சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகிது. ஆனால் இதுகுறித்த ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி இடம் பெறவில்லை என்று சொல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால் சென்னையில் தமிழர் பெருமைகளை விளக்கும் விதமாக நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கூறியதே கனிமொழி தான். ஆகவே இதுவும் ஒரு ஓரங்கட்டும் நடவடிக்கையா என்று கேள்வி எழுந்தது.

இந்நிலையில் திமுக மகளிர் அணியை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு விஷயங்களை கனிமொழி முடுக்கி விட்டுள்ளார். இதுகுறித்து கழக மகளிரணிக்கு கடிதம் ஒன்றை கனிமொழி எழுதியுள்ளார். அதில், நம்முடைய கழகத்தின் அடித்தளமாக விளங்கக்கூடிய இளையர்கள் பலரை நம் கொள்கைகள் சென்றடையவும், நமது கழகத்தில் அவர்களை உறுப்பினர்களாக இணைக்கவும் நம் கழகத் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 18.12.2021 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினார். தமிழகத்தின் மக்கள் தொகையில் சரிசமமான பங்கு உடையவர்கள் பெண்கள், அதிலும் நாளைய சமுதாயத்தின் சிந்தனையை வடிவமைக்கும் திறன் பெற்றவர்கள் இன்றிருக்கும் 18-30 வயதுடைய இளம் பெண்கள் ஆவார்கள்.

நமது கழகத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்த இளம் பெண்களின் பங்கு இன்றியமையாதது ஆகும். திராவிட முன்னேற்ற கழகத்தின் மையக் கோட்பாடாக விளங்கும் சமூக நீதி சிந்தனையின் வெளிப்பாடே அரசியலில் பெண்கள் தனக்கென உரிமைகளை உருவாக்குவது. நமது கழக மகளிர் அணி அடுத்த தலைமுறைக்கான சுய சிந்தனை உடைய, உரிமைகளை உணர்ந்த இளம் பெண்களை உருவாக்க வேண்டும். அந்த வகையில் இன்றிருக்கும் 18-30 வயதிற்குள்ளான இளம் பெண்களை நமது கழகத்தில் ‘மகளிரணி உறுப்பினர்களாக’ இணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

அரசியலில் ஆர்வமுள்ள இளம் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதையும் தாண்டி, நாம் 18-30 வயதிற்குள் உள்ள இளம் பெண்களை மகளிர் அணி உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கு அரசியலின் மேல் ஈடுபாடு ஏற்பட வழி செய்து நமது கழகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம் வலுவாக உள்ளதை உறுதி செய்வோம். இந்த முக்கியமான முயற்சியை நீங்கள் அனைவரும் இன்றே தொடங்கி, இதில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் சம்மந்தமான தகவல்களை அணித் தலைமையுடன் நாள்தோறும் பகிருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |