Categories
மாநில செய்திகள்

ஏறுமுகம் காணும் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகின்றது. தங்ககாசுகளின் மீதான முதலீடு அதிகரித்ததால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்தது. ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியான வீழ்ச்சியைக் கண்ட தங்கம் 37 ஆயிரத்தில் நீடித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து 4,639 க்கு விற்பனையாகிறது. அதன்படி சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து 37,112 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் அறுபத்தி 67.22 ரூபாய்க்கும், ஒரு கிலோ 67,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Categories

Tech |