ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது .
இதற்கு முன் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி நாளை தொடங்க உள்ள 3-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளது .இந்நிலையில் 3-வது டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்அணியில் இடம் பிடித்துள்ளார்.