ஆஷஸ் டெஸ்ட் தொடரில் புதுமுக வீரராக இடம் பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 8 கேட்ச் பிடித்து அசத்தினார் .
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது .இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இதில் ஆஸ்திரேலிய அணியில் புதுமுக வீரர்கள் இடம்பிடித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி முதல் போட்டியிலேயே 8 கேட்ச் பிடித்து அசத்தினார் .
இதன் மூலம் அறிமுகமான டெஸ்ட் போட்டியிலேயே அதிக விக்கெட் கைப்பற்றிய விக்கெட் கீப்பர்களான ஆஸ்திரேலிய அணியின் பிரையன் டாபெர் மற்றும் இங்கிலாந்து அணியின் கிறிஸ் ரீட் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார். பிரையன் டாபெர் கடந்த 1966-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும்,கிறிஸ் ரீட் 1999-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தலா 8 கேட்ச் பிடித்து அசத்தினர் .தற்போது இந்த சாதனையை அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார் .