Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் தொடர் :2-வது  டெஸ்டில் பேட் கம்மின்ஸ் நீக்கம் ….! ஆஸி.கிரிக்கெட் போர்டு அதிரடி …!!!

ஆஷஸ் தொடரில் 2-வது  டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . 

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக இன்று நடைபெறுகிறது .இதில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணி வீரர் ஹேசில்வுட் 2-வது டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் அடிலெய்டில் நடைபெறும் டெஸ்டில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .ஏனெனில் அவர் கொரோனா  தொற்றால்  பாதிக்கப்பட்ட நபருடன்  தொடர்பில் இருந்ததால் இப்போட்டியில் விளையாட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இதனால் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |