ஆஷஸ் தொடர் வரலாற்றிலேயே 85 வருடங்களுக்கு பிறகு முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் சாதனை படைத்துள்ளார் .
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோரி பர்ன்சை, ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் தனது முதல் பந்திலேயே ஆட்டமிழக்க செய்தார் .
இதன் மூலம் ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றிலேயே 85 வருடங்களுக்கு பிறகு முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் சாதனை படைத்துள்ளார்.இதற்கு முன்பாக கடந்த 1936-ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் மெக்ரோமிக், இங்கிலாந்து அணி வீரர் வொர்த்திக்டெனை முதல் பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் பிறகு தற்போது ஸ்டார்க் இந்த சாதனையை படைத்துள்ளார்.