Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

அஷீரா நோன்பு 9_ஆம் நாள் நோன்பு எதற்காக தெரியுமா ?

அஷீரா நாள் மொஹரம் மாதத்தின் 10_ஆவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் , யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒரு நோன்பை அதிகப்படுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் கூறினார்கள். அது எந்த நாள் என்பதை அறிந்து கொள்வோமா ?

இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ( ஸல் ) அவர்கள் ஆஷீரா நாளில் தாமும் நோன்பு நோற்று , மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள் , ( அது ) யூதர்களும் , கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நளாயிற்யே என்று வினவினர். அதற்கு நபியவர்கள் , இன்ஷா அல்லாஹ் , ( அல்லாஹ் நாடினால் ) அடுத்த ஆண்டில் நாம் ( முஹர்ரம் ) ஒன்பதாவது நாளில் நோன்பு நோர்போம் என்று கூறினார்கள்.ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் இறந்து விட்டார்கள். மற்றொரு அறிவிப்பில் , அடுத்த ஆண்டு வரை நான்  உயிரோடு இருந்தால் , ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது. ஆதாரம் : முஸ்லீம் – 1916,1917

இனியவர்களே அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) 9-ஆவது நாளில் நோன்பு நோற்கவிட்டாலும் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களும் நோன்பு நோற்கவேண்டும். இரு நோன்புகளும் நோர்த்தால் அல்லாஹ அருள் புரிவானாக.

Categories

Tech |