நாடைபெற இருக்கும் ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் எங்களது அணிக்கு சவாலாக இருக்கும் என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பர்மிங்காமில் இன்று பிற்பகல் தொடங்க இருக்கிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பைன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இந்திய நேரப்படி சரியாக பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேசியதாவது, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்ற எங்களுக்கு ஆஷஸ் தொடர் சவாலாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.