ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரான அஷ்ரப் கனி தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின் காபூல் நகரிலிருந்து திடீரென்று வெளியேற முடிவு எடுத்ததாக கூறியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியபின் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. எனவே, ராணுவ அதிகாரிகள், முக்கிய தலைவர்கள் மற்றும் மக்கள் என்று பலரும் அந்நாட்டிலிருந்து வெளியேறினார்கள். அந்த சமயத்தில், அந்த நாட்டின் அதிபராக இருந்த அஸ்ரப் கனியும் விமானத்தின் மூலம் தப்பித்தார்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அவர் நேர்காணலில், தெரிவித்திருப்பதாவது, காபூல் நகரிலிருந்து, வெளியேற வேண்டும் என்று இரண்டு நிமிடங்களில் திடீரென்று தீர்மானித்ததாக கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி விட்டு, முன்னேறிக் கொண்டிருப்பதை அறிந்தவுடன், ஆப்கானிலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று தான் தீர்மானித்ததாக கூறியிருக்கிறார்.
ஆனால் நாட்டிலிருந்து வெளியேறிய சமயத்தில், எங்கு செல்லவேண்டும்? என்று எனக்கு தெரியவில்லை என்றும் காபூல் நகரை விட்டு வெளியேறி விடவேண்டும் என்று மட்டும் அப்போது நினைத்ததாக கூறியிருக்கிறார். மேலும், அவரின் இந்த முடிவிற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. எனினும், பெட்டிகளில் இருந்த பணத்தை தான் எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.