Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டெல்லி அணிக்கு மாறும் அஸ்வின்”…. பஞ்சாப் அணி கேப்டனாக கேஎல் ராகுல்.!!

ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் டெல்லி அணிக்கு மாறும் நிலையில் கேஎல் ராகுல் பஞ்சாப் அணி கேப்டனாக நியமிக்கப்படுகிறார். 

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய அணியின் அஷ்வின் கடந்த இரண்டு ஆண்டுகளாக  செயல்பட்டு வந்தார். அஸ்வின் ஐபிஎல் தொடரில் இது வரையில் மொத்தம் 139 போட்டியில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

Image result for அஸ்வின்

அஸ்வின் கேப்டனாக செயல்பட்டு வந்த இரண்டு தொடர்களிலும் பஞ்சாப் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் புதிய கேப்டன் இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கிய டெல்லி அணி சிறப்பாக ஆடியது. அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்  புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை நியமித்துள்ளது.

Image result for ashwin kl rahul

இதையடுத்து பஞ்சாப் அணிக்கும் புதிய கேப்டனை நியமிக்க அந்த நிர்வாகம் முடிவு செய்து, அஸ்வினுக்கு பதிலாக கே.எல் ராகுலை கேப்டனாக நியமித்துள்ளது. இந்நிலையில் அஸ்வினை  டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணி  வாங்கியுள்ளது. இதுபற்றிய  அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Categories

Tech |