சர்ச்சைக்குரிய விதத்தில் அவுட் செய்ததாக #AshwinMankads என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் 2வது இடத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகள் என பஞ்சாப் பவுலர்களை அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது என்ன வென்றால் அஸ்வின் 13 வது ஓவரை வீசினார். அப்போது ஜாஸ் பட்லர் ரன்னர் திசையில் நின்று கொண்டிருந்தார்.. அப்போது அந்த ஓவரின் 5ஆவது பந்தை அஸ்வின் வீசும் போது பட்லர் க்ரீஸை விட்டு வெளியே நகர்ந்தார். அப்போது அஸ்வின் “மன்கட்” முறையில் ரன் அவுட் செய்தார். ரன்னர் க்ரீஸை விட்டு வெளியே வந்ததால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் இருக்கிறது. இப்போது அஸ்வின் செய்த இந்த ரன் அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அஸ்வின் செய்தது தவறு அவர் கிரிக்கெட்டை அசிங்கப் படுத்தி விட்டார் என்று சமூக வலை தளங்களில் கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
இதுகுறித்து அஸ்வின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்போது ‘மன் கட்’ முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக பெரிய அளவில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகள் இயல்பாக நடக்கக் கூடியது. நானும் முழுதாக ஓடிவந்து கிரீசை தொட்டு பந்துவீச வந்தேன், அப்போது ஜாஸ் பட்லரும் கிரீஸை விட்டு நகர்ந்து வெளியே விட்டார். அவர் என்னை பார்க்கவும் இல்லை இந்த வாய்ப்பை பயன்படுத்தி மன்கட் முறையில் அவரை நான் அவுட் செய்தேன். நான் செய்த இந்த அவுட்தான் ஆட்டத்தின் போக்கையே மாறியது. இதுபோன்ற அவுட்தான் முழுமையாக ஒரு போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும் என்றார்.
மேலும் கூறிய அஸ்வின் பட்லரை திட்டமிட்டு இம்முறையில் அவுட் ஆக்கவில்லை. விளையாட்டின் போது இயல்பாக அமைந்தது மேலும் நான் கிரிக்கெட் விதிகளை மீறி பட்லரை அவுட் செய்யவில்லை. இதில் எங்கிருந்து விளையாட்டின் மதிப்பும் ஸ்பிரிட்டும் பாதித்தது என எனக்கு ஒன்றும் தெரியவில்லை. கிரிக்கெட்டை அதன் விதிப்படி விளையாடினால் தவறென்றால் அப்போது அந்த விதியை மாற்ற வேண்டும் இல்லை அதை சரி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
https://youtu.be/u9BLt23MCG0
பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் அஸ்வினின் இந்த செயலை கண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். முக்கியமாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவார்கள் அப்போது கைகுலுக்க அஸ்வின் வந்த போது பட்லர் அவரை கண்டுகொள்ளாமல் சென்று விட்டார். இதனை சற்று அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்த அஷ்வின் அவரை தொடர்ந்து வந்த பயிற்சியாளரிடம் ஏதோ கூறினார். இந்த போட்டோவும் வீடியோவும் வைரலாகி வருகிறது.