Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸி. கிரிக்கெட் வாரியத்தின் கனவு அணி …. 4 இந்திய வீரர்கள் இடம்பிடிப்பு ….!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கனவு டெஸ்ட் அணியில் இந்திய அணி தரப்பில் வீரர்கள் 4 இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கனவு அணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய  11 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர் .இதேபோல் பாகிஸ்தான் அணியில் 3 வீரர்களும் ,ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து ,இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளில் தலா ஒரு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின்  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கனவு அணியில் இடம்பெற்றுள்ளார் .அதேபோல் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனான  ரோகித் சர்மா இதில் தொடக்க வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த டெஸ்ட் கனவு அணிக்கு இலங்கை அணி வீரர் கருணா ரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |