கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவிற்கு கடன் வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது
சீனாவின் ஆதரவில் இயங்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி கொரோனா தொற்றை எதிர்த்து போராட இந்தியாவிற்கு உதவும் வகையில் 5,712 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது என்பதை புதன்கிழமை அன்று வங்கி தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி திட்டம் சமூகப்பாதுகாப்பு வலைகளை விரிவுபடுத்துதல், வணிகங்களுக்கான பொருளாதார உதவியை வலுப்படுத்துதல், மற்றும் சுகாதார சேவையை மேம்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டது.
இந்தியாவின் தொற்று பரவிவரும் அவசரகால தேவைக்காக 500 மில்லியன் டாலர் கடன் அளிப்பதற்கான ஒப்புதலை மே மாதம் அளித்தது. இந்த இரண்டு கடன் உதவியும் தனியார் மற்றும் பொதுத் துறைகள் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு உதவிகரமாக இருக்கும் என வங்கி அறிவித்துள்ளது.