ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்திய அணியின் பயிற்சியாளராக இவர் மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கயிருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கே இருக்கிறது. ஏற்கனவே அனைத்து நாடுகளும் ஆசிய கோப்பையில் விளையாடும் அணியை தேர்வு செய்து அறிவித்து விட்ட நிலையில், சில நட்சத்திர வீரர்களான பும்ரா, ஷஹீன் அப்ரிடி உள்ளிட்டோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான, இந்திய தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இந்தியாவுடன் சேர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல மாட்டார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால் ராகுல் டிராவிட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.. ராகுல் டிராவிட் 10 நாள் ஓய்வில் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் யாரேனும் நியமிக்கப்படலாம் என்று கேள்வியும் இருந்த வண்ணம் இருக்கிறது.
இந்திய அணி 28ஆம் தேதி நடக்கும் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு அணி புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட வழக்கமான சோதனையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு சோதனை செய்தபோது கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர் இந்திய அணியுடன் செல்ல மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிராவிட் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ளார் மற்றும் லேசான அறிகுறிகளுடன் இருக்கிறார் என்றும், குணமடைந்ததும் அணியில் இணைவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இருப்பினும் இதுவரையில் இந்திய அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளர் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதனால் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின் டிராவிட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வார் என்று உறுதியாக தெரிகிறது. இதனால் ஒரு சில போட்டிகளில் இந்திய அணி பயிற்சியாளர் இல்லாமல் களமிறங்க வாய்ப்பு அதிகபட்சமாக இருக்கிறது. ஒருவேளை ராகுல் டிராவிட்டால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல முடியவில்லை என்றால் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியுடன் இடைக்கால பயிற்சியாளராக பயணம் செய்த வி.வி.எஸ் லட்சுமண் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.