Categories
தேசிய செய்திகள்

ஆசியா கண்டத்தில் நம்பர் 1… கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி…சீனாவின் ஜாக் மாவை பின்னுக்கு தள்ளி முன்னேறினார் …!!!

உலக அளவில்  நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பெற்றுள்ளது. ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் நம்பர் 1 இடத்தை  முகேஷ் அம்பானி கைப்பற்றினார் .

அமெரிக்காவில் ‘போர்ப்ஸ்’ என்ற பத்திரிக்கை நிறுவனம் ,உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளது . 35 வருடங்களாக இந்த பணியை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை நிறுவனம், சிறப்பாக செய்து வருகிறது. 35 வது ஆண்டான நேற்று,  கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 2,755 கோடீஸ்வரர்கள் இடம்பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 660 ஆக அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்காவில்  724 பேரும், சீனாவில்  698 பேரும் மற்றும் இந்தியாவில் 140 பேரும் இடம்பெற்றுள்ளன. இதில் முதலிடத்தை அமேசான் நிறுவனரான  ஜெப் பெசோஸ் தொடர்ந்து 4வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவருடைய சொத்து மதிப்பு 17 ஆயிரத்து 700 கோடி டாலர் ஆகும்.

2வது இடத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரான  எலான் மஸ்க்  பெற்றுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 15 ஆயிரத்து 100 கோடி டாலராகும். இதன்பிறகு அடுத்தடுத்த இடங்களை பிரான்ஸைச் சேர்ந்த பெர்னார்டு அர்னால்ட் , அமெரிக்காவை சேர்ந்த பில்கேட்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனரான  மார்க் ஜுகர்பெர்க் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவரான  முகேஷ் அம்பானி 10வது இடத்தை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாது  அவர்  ஆசியா கண்டத்தில் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற இடத்தை  மீண்டும் கைப்பற்றினார். இந்த நம்பர் 1 இடத்தை ஓராண்டிற்கு முன், சீனாவை சேர்ந்த ஜாக் மா பெற்றிருந்தார் . தற்போது அவரை பின்னுக்கு தள்ளி , முகேஷ் அம்பானி நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 8 ஆயிரத்து 450 கோடி (6லட்சத்து 8 ஆயிரத்து 400 கோடி )டாலராகும்.

Categories

Tech |