ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 5 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி வருகிற 20-ஆம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 16-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இப்போட்டி மும்பை, நவி மும்பை, புனே ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. மேலும் இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, சீனா ,தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜப்பான் ,தென்கொரியா, சீன தைபே வியட்நாம், ஈரான், மியன்மார் ஆகிய 12 நாடுகள் பங்கேற்க உள்ளன.
இவைகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் தமிழகத்தை சேர்ந்த இந்துமதி, சந்தியா, கார்த்திகா, சவுமியா, மாரியம்மாள் ஆகிய ஐந்து வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.