ஆசியக்கோப்பை இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் 19.1 ஓவரில் பாகிஸ்தான் 10 விக்கெட்டையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15 வது ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.. இதில் 4 அணிகளும் தங்களுக்குள் ஒருமுறை மோதிக்கொள்ள வேண்டும். புள்ளி பட்டியலில் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். அதன்படி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து வெளியேறி விட்டது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2 போட்டியில் வென்று இறுதி போட்டிகள் நுழைந்து விட்டது. பாகிஸ்தான் – இலங்கை அணிகள் 11ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோதுகிறது.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வானும், பாபர் அசாமும் களமிறங்கின்றனர். பிரமோத் மதுஷன் வீசிய 4ஆவது ஓவரில் ரிஸ்வான் 14 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த பக்கர் ஜமானும் (13) பொறுமையாக தட்டி ஆடிய நிலையில், சமிகா கருணாரத்னா வீசிய 10ஆவது ஓவரில் தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆகி ஆட்டமிருந்து வெளியேறினார்.
மறுபுறம் பொறுமையாக ஆடிவந்த பாபர் ஆசாமும் 30 (29) ரன் தேவை என்பதால் ஹசரங்கா வீசிய அடுத்த 11ஆவது ஓவரில் இறங்கி சிக்ஸர் அடிக்க முயன்ற போது போல்ட் ஆகி வெளியேறினார் பாகிஸ்தான் அணியின் தூணாக இருந்த ஓபனிங் சரிந்ததால் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, முகமது நவாஸ் மட்டும் 26(18) ரன்கள் அடித்து 19ஆவது ஓவரில் ரன் அவுட் ஆனார். இறுதியில் 19.1 ஓவரில் பாகிஸ்தான் 10 விக்கெட்டையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் ஹஸரங்கா 3 விக்கெட்டுகளும், பிரமோத் மதுஷன் மற்றும் தீக்சனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.