Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : தொடர்ந்து 7 தொடர்ல யாருமே ஆடல….. “புதிய சாதனை படைக்க இருக்கும் ஹிட் மேன்”…. என்ன சாதனை தெரியுமா?

15ஆவது ஆசியக்கோப்பை போட்டி தொடங்கியவுடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது பெயரில் ஒரு புதிய சாதனையை பதிவு செய்வார்.

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்திய அணி 7 முறை கோப்பையை வென்றுள்ளது. இதில் கடந்த 2018ல் ரோஹித் தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இலங்கை அணி 5 முறையும், மீதமுள்ள 2 சீசன்களில் பாகிஸ்தான் வென்றுள்ளது.

இந்நிலையில் 20 ஓவர்களாக நடைபெறும் 15ஆவது ஆசிய கோப்பையை எதிர்நோக்கி கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை  போட்டி தொடங்கியவுடன் ஒரு புதிய சாதனையை இந்திய அணியின் கேப்டர் ரோஹித் சர்மா படைப்பார். அதாவது, தொடர்ந்து 7 ஆசியக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா பதிவு செய்வார்..

தொடர்ந்து ஏழு ஆசிய கோப்பைகளில் விளையாடும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஹிட்மேன் பெறுவார். இதுவரை 6 முறை இந்தப் போட்டியில் விளையாடியுள்ள அவர், இந்திய அணிக்காக ஆசிய கோப்பையில் 26 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Categories

Tech |