Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : விலகிய ஷாஹீன் அஃப்ரிடி…. “தப்பிச்சிட்டீங்க”…. இந்திய அணியை கலாய்க்கும் பாக். ரசிகர்கள்..!!

காயம் காரணமாக ஷாஹீன் அஃப்ரிடி ஆசிய கோப்பையில் இருந்து விலகியதால் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்து விட்டது என பாகிஸ்தான் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பை தொடர் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. எப்போதும் 50 ஓவராக நடத்தப்படும் இந்த 15 வது ஆசிய கோப்பை தொடர், இந்த முறை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு தயாராகும் விதமாக 20 ஓவராக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் ஆசியாவின் டாப் 6 அணிகள் மோத இருக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோத வேண்டும்.. அதில் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதி, அதில் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக மல்லு கட்டும். இதுவரை மொத்தம் 14 முறை ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. அதில் 7 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது இந்திய அணி. கடைசியாக 2018 ஆம் ஆண்டு இதே துபாயில் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது.

எனவே கடந்த தொடரை போலவே இந்த முறையும் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட இதர அணிகளை வீழ்த்தி 8ஆவது முறையாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த சில காலங்களாக இந்திய அணி மிக வலுவான நிலையில் இருக்கின்றது.. ஏனென்றால் கடந்த டி20 உலக கோப்பையில் தோல்வி அடைந்ததற்கு பின் நியூஸிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, இங்கிலாந்து  வெஸ்ட் இண்டீஸ் என பங்கேற்ற அனைத்து தொடர்களிலுமே இந்தியா தோல்வி அடையாமல் வெற்றி முகம் கண்டுள்ளது. இதனால் மிக வலுவாக திகழும் இந்திய அணி இந்த முறை ஆசிய கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கடந்த 2021 டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்து அவமானத்தை பரிசாக அளித்தது. எனவே இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அதற்கு பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி தான்.. ஏனென்றால் தன்னுடைய அசத்தல் பந்துவீச்சால் கே எல் ராகுல், ரோகித் சர்மா என டாப் ஆர்டரை அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்னில் அவுட் செய்து வெளியேற்றினார். அத்துடன் அரைசதம் அடித்து அணிக்காக போராடிய விராட் கோலியையும் வீழ்த்தி இந்தியாவுக்கு தோல்வியை பரிசாக அளித்து விட்டார். இந்த போட்டியில் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்துவிட்டது.

இந்தநிலையில் சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் போது காயம் அடைந்த சாஹின் அப்ரிடி இந்த ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டு இருந்த பாகிஸ்தான அணியில் காயத்தை காட்டிலும் சேர்க்கப்பட்டிருந்தார். மேலும் தற்போது நெதர்லாந்தில் பங்கேற்று விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணியில் இருந்து வரும் அவர் களமிறங்கி விளையாடவில்லை. இதனால் அவர் ஆசிய கோப்பில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

இந்த நிலையில் ஆசிய கோப்பைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் இந்த தொடரில் இருந்து சாஹின் அப்ரிடி விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.. அது மட்டும் இல்லாமல் விரைவில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் அவர் விலகுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் வரும் அக்டோபரில் நடைபெற இருக்கும் முத்தரப்பு தொடர் மற்றும் அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக குணமடைந்து அவர் அணிக்கு திரும்புவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இருந்தாலும் ஆசிய கோப்பையில் இருந்து அவர் விலகி உள்ளது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவு தான். ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக அந்த அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் 2021 ஐசிசி யின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற பாகிஸ்தானின் முதன்மை பந்துவீச்சாளராக கருதப்படுகிறார். அதேபோல முன்னதாக இந்திய அணியிலும் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகி உள்ளார்.. எனவே இரு அணிகளும் பந்துவீச்சு துறையில் சம நிலையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த ஷாஹீன் அஃப்ரிடி கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகிய நிலையில், பாகிஸ்தானுக்கு பின்னடைவு என்பதை விட இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

https://twitter.com/Musskkaan/status/1560943921240621056

ஒருபக்கம் சோகமாக பதிவிட்டு வரும் பாகிஸ்தான் ரசிகர்கள் ஷாஹீன் அஃப்ரிடி இல்லாத காரணத்தால் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கிண்டலாக கலாய்த்து மீம்ஸ் கிரியேட் செய்து வெளியிட்டு வருகின்றனர்.. ஆனாலும் பாகிஸ்தானை விட இந்திய அணி தற்போது வலுவான நிலையில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.. ஏனென்றால் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் சமீபத்தில் சாய்த்து விட்டது இந்தியா.. தற்போது பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, எந்த அணியாக இருந்தாலும் சரி தோல்வியை பரிசளிக்க இந்திய அணி காத்திருக்கிறது என்று ரஇந்திய சிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |