Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : 38ல் ஆல் அவுட்…. 155 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்திய பாகிஸ்தான்..!!

ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது பாகிஸ்தான்..

2022 ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி நேற்று இரவு  7: 30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்களாக  கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். இஷான் கான் வீசிய 3ஆவது ஓவரில் பாபர் அசாம் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினாலும், அதனைத்தொடர்ந்து வந்த பக்கர் ஜமான் மற்றும் ரிஸ்வான் ஜோடி சிறப்பாக ஆடியது.

முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார்.. அதேபோல பக்கர் ஜமானும் 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்த நிலையில், 17 வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஸ்வான் – குஷ்தில் ஷா இருவரும் கைகோர்த்து ஆடினர். கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா அதிரடியாக விளாசினார்.. குறிப்பாக ஆட்டத்தின் கடைசி 20ஆவது ஓவரில் மட்டும் 4  சிக்ஸர்கள் விளாசினார். அந்த ஓவரில் 4 சிக்ஸர் ஒரு வைட் பவுண்டரி என மொத்தம் 29 ரன்கள் வந்தது.. இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.. முகமது ரிஸ்வான் 57 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 78 ரன்களுடனும், குஷ்தில் ஷா 15 பந்துகளில் 5 சிக்ஸர் உட்பட 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காம்ல் களத்தில் இருந்தனர்.

 

இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் நிசாகத் கான் மற்றும் யாசிம் முர்தசா ஆகிய இருவரும் களமிறங்கினர்.  தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் மிரட்டி ஆதிக்கம் செலுத்தியது.  நஸீம் ஷா வீசிய 3ஆவது ஓவரின் முதல் பந்தில் நிசாகத் கான் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் பாபர் ஹயாத் 0 ரன்களில் வெளியேறினார்.  அதன்பின் வந்த ஒரு வீரரும் நிலைத்து நிற்கவில்லை.. சொல்லப்போனால் யாருமே 10 ரன்கள் கூட தாண்டவில்லை.

 

அதாவது யாசிம் முர்தசா 2, கிஞ்சித் ஷா 6, அய்சாஸ் கான் 1, ஜீஷன் அலி 3, அர்ஷத் முகமது 3, ஸ்காட் மெக்கெக்னி 4, ஆயுஷ் சுக்லா 1, முகமது கசன்பர் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இஷான் கான் 0 ரன்னில் களத்தில் இருந்தார். ஹாங்காங் வீரர்களின் மொத்த ரன்கள் 28 ஆகும்… எக்ஸ்ட்ரா 10 ரன்கள் சேர்த்து மொத்தம் 38…. இதனால் ஹாங்காங் அணி 10.4 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 38 ரன்கள் மட்டுமே அடித்து மோசமாக தோற்றது.. இதனால் 155 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது பாகிஸ்தான்.. இந்தியாவுக்கு எதிராக கடந்த போட்டியிலாவது 193 ரன்கள் இலக்கை தூரத்தி போராடிய ஹாங்காங் 152 ரன்கள் சேர்த்தது..

ஆனால் இந்த போட்டியில் படுதோல்வியை சந்தித்து விட்டது.. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் 4 விக்கெட்டுகளும், முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளும், நசீம் ஷா 2 விக்கெட்டுகளும், ஷாநவாஸ் தஹானி 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணி இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி சூப்பர்4ல் பாகிஸ்தான்- இந்தியா அணிகள் மோத இருப்பதால் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ட்ரீட் காத்திருக்கிறது.  

 

Categories

Tech |