ரோகித் சர்மா இந்த முறையும் ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்து அசாருதீன் மற்றும் தோனி வரிசையில் இணைவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
ஆசிய கோப்பை போட்டி :
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கோப்பை என்பது ஆடவர் ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். ஆசிய நாடுகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 1983 இல் நிறுவப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒரே கண்ட சாம்பியன்ஷிப் மற்றும் வெற்றி பெறும் அணி ஆசியாவின் சாம்பியனாகும். ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் போட்டியானது ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களாக மாறி மாறி நடைபெறும்.
ஆசிய கோப்பையின் 15வது தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கடைசியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி 2018 தொடரை வென்றதால், ஆசிய கோப்பையின் நடப்பு சாம்பியனாக இந்தியா இருந்து வருகிறது.
1984 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் 7 பட்டங்களை வென்ற இந்தியா அதிக வெற்றி பெற்ற அணியாக திகழ்கிறது. 1984, 1988, 1990/91, 1995, 2010, 2016, மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் 7 ஆசியக் கோப்பைப் பட்டங்களை வென்ற இந்திய அணி ஆசிய கோப்பையில் மிகவும் வெற்றிகரமான அணியாகும். இந்தியாவுக்கு அடுத்தபடியாக 5 ஆசிய கோப்பை பட்டங்களை வென்ற இரண்டாவது அணியாக இலங்கை உள்ளது. மேலும் அடுத்தபடியாக பாகிஸ்தான் 2 முறை கோப்பைகளை வென்றுள்ளது.
இதுவரை இந்திய அணி 7 முறை ஆகிய கோப்பையை வென்றுள்ள நிலையில், அந்த ஏழு முறையும் இந்திய அணியில் யார் யார் கேப்டனாக இருந்தார்கள் என்பது பற்றி பார்ப்போம்.
1984 – சுனில் கவாஸ்கர்
1988 – திலீப் வெங்சர்க்கார்
1991 – முகமது அசாருதீன்
1995 – முகமது அசாருதீன்
2010 – தோனி
2016 – தோனி
2018 – ரோஹித் சர்மா
இதுவரை நடந்த தொடரில் அசாருதீன் மற்றும் தோனி இருவரும் இரண்டு முறை இந்திய அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்துள்ளார்கள்.. இந்த நிலையில் ரோகித் சர்மா இந்த ஆசிய தொடரில் கேப்டனாக செயல்படுகிறார். எனவே இந்த தொடரில் அவர் கோப்பையை வென்று கொடுத்தால் இவர்களின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்திய அணியிலிருந்து விராட் கோலி கேப்டன் பதிவியிலிருந்து விலகிய பின் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையில், கடந்த சில காலமாக பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் இந்திய அணி வென்று அசத்தி வரும் நிலையில், ஹிட்மேன் ரோகித் தலைமையில் இந்த ஆசிய கோப்பையையும் வெல்லும் என்பது இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர்..
ஆசிய கோப்பையில் வென்ற அணிகள் விவரம் (1984-2022) ”