Categories
மற்றவை விளையாட்டு

“2019 ஆசிய தடகள சேம்பியன்ஷிப் ” 17 பதக்கங்களுடன் 4 வது இடம் பிடித்த இந்தியா…!!

தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோலாகலமாக நிறைவடைந்த நிலையில் 17 பதக்கங்களுடன் 4 வது இடத்தை இந்தியா பிடித்தது.

23-வது ஆசிய தடகள சேம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் உள்ள கலீபா சர்வதேச மைதானத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, சீனா, இந்தோனேசியா, பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், ஜப்பான், குவைத், தாய்லாந்து, ஓமன் உட்பட 43 நாடுகளில் இருந்து 800-க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள்  பங்கேற்றனர். இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து  தங்கப்பதக்கத்தை வென்றார். இதேபோல், குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர் சிங் தூர் தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்தார்.

Image result for 2019 ஆசிய தடகள சேம்பியன்ஷிப் போட்டி 17 பதக்கங்களுடன் 4 வது இடம் பிடித்த இந்தியா...!!

Image result for 2019 ஆசிய தடகள சேம்பியன்ஷிப் போட்டி 17 பதக்கங்களுடன் 4 வது இடம் பிடித்த இந்தியா...!!

மகளிர் பிரிவில் ஹெப்டத்லான் போட்டியில் சுவப்னா பர்மனும் ஈட்டி எறிதல் போடடியில் அன்னு ராய் ஆகியோரும் வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். ஆடவர் பிரிவில் ஈட்டி எறிதல் போடடியில் சிவ்பால் சிங்கும், 3,000 மீட்டர் ஸ்டீபில் சேஸ் போட்டியில் அவிநாசும் வெள்ளிப்பதக்கத்தை வென்றெர். 400 மீட்டர் ரிலே போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆஜய் குமார் சரோஜ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் டியூடி சந்த் வெண்கலப்பதக்கத்தை வென்றார். பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பி.யூ சித்ரா தங்கம் பதக்கம் வென்று சாதனையாற்றினார்.

Image result for 2019 ஆசிய தடகள சேம்பியன்ஷிப் போட்டி 17 பதக்கங்களுடன் 4 வது இடம் பிடித்த இந்தியா...!!

முடிவில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்ளை வென்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. பஹ்ரைன் 11 தங்கம், 7 வெள்ளி், 4 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று முதலிடமும், 10 தங்கம், 13 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை வென்று சீனா இரண்டாவது இடத்தையும் பிடித்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 12 தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்கள் வென்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |