Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தலைமையாசிரியர் செய்த செயலால்…. பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 2 ஆசிரியைகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பள்ளி ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் ஜோசப் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளிக்கு வேறு பணியில் இருந்து 2 ஆசிரியைகள் பணிமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளனர். அந்த 2 ஆசிரியைகளுக்கு ஜோசப் ஜெயசீலன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த ஆசிரியர்கள் ஜோசப் ஜெயசீலனை எச்சரித்துள்ளனர். ஆனால் ஜோசப் ஜெயசீலன் அதனை கண்டுகொள்ளாததால் பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் கல்வி அதிகாரியிடம் பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவருக்கும் பணிமாறுதல் கிடைத்துள்ளது. ஆனால் ஜோசப் ஜெயசீலன் அவர்களை பணியிலிருந்து விடுவிக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு ஆசிரியை இது குறித்து மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை முன்கூட்டியே அறிந்த ஜோசப் ஜெயசீலன் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. இதனையறிந்த ஜோசப் ஜெயசீலன் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் ஜோசப் ஜெயசீலனை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஜோசப் ஜெயசீலனின் செல்போன் சிக்னல் காண்பித்ததால் காவல்துறையினர் அவரை தேடி அங்கு வந்தனர். ஆனால் அவர் கிடைக்காததால் அவரது வங்கி கணக்கை காவல்துறையினர் முடக்கினர். அதில் ஜோசப் ஜெயசீலன் எ.டி.எம். மையத்தில் ஆள்மாறாட்டம் செய்து பணம் எடுத்தது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளது.

அந்த காட்சியில் ஜோசப் ஜெயசீலன் மொட்டை அடித்து தாடி வைத்திருப்பதை காவல்துறையினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஜோசப் ஜெயசீலனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால்அங்கு தேடியும் ஜோசப் ஜெயசீலன் கிடைக்கவில்லை. இதற்கிடையே மதுரை தெற்குவாசல் பந்தடி பகுதியில் ஜோசப் ஜெயசீலன் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜோசப் ஜெயசீலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பின்னரே இதில் யார் யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |