தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதலுக்கான தேர்வு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதலுக்கான தேர்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டம் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முதல் நாள் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை 145 நபர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 100 பேர் மட்டுமே எழுதியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மற்றவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மேலும் இந்த தேர்வு வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.