ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்டது. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது .இதை அடுத்து வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது .இதைத்தொடர்ந்து நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது .
அதேசமயம் 7 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது இதனிடையே நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதுகின்றன .இரு அணிகளும் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் காலிறுதிப் போட்டியில் மோதின இதில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது .இந்த நிலையில் தற்போது இரு அணிகளும் மீண்டும் மோத இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.