Categories
விளையாட்டு ஹாக்கி

ஆசிய கோப்பை ஹாக்கி :அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி ….! ரசிகர்கள் ஏமாற்றம் ….!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது .

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா ,தென்கொரியா ,பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய முதல் 4 இடங்களை பிடித்தது .இந்நிலையில் இன்று மாலை 6  மணிக்கு நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஜப்பான் அணிகள் மோதின. இதில் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி நடந்த லீக் சுற்று ஆட்டங்களில் வங்காளதேசம் ,பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்து  ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

அதே சமயம் ஜப்பான் அணி வங்காளதேச அணியை  மட்டுமே தோற்கடித்து பாகிஸ்தான், தென்கொரியா அணிகளுக்கு எதிரான போட்டியில் டிரா மட்டுமே செய்தது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது .இதில் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜப்பான் அணி 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை  வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜப்பான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Categories

Tech |