Categories
விளையாட்டு ஹாக்கி

ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பானை பந்தாடியது இந்தியா ….! ஹாட்ரிக் வெற்றி ….!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பான் அணியுடன்  மோதுகிறது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை டிரா செய்தது .இதன்பிறகு வங்காளதேச எதிரான ஆட்டத்தில் 9-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால்  முதல் பாதியில் ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்திலும் இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இறுதியாக        6-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3 வெற்றி,  ஒரு டிரா  என 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Categories

Tech |