Categories
விளையாட்டு ஹாக்கி

ஆசிய கோப்பை ஹாக்கி :ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தென் கொரியா ….!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற தென் கொரியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது .

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வந்தது .இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பான்- தென் கொரியா அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில்  கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய  தென்கொரிய அணியில் ஜோங்யுன் ஜாங் கோல் அடித்தார்.

இதனால் 3-3 என்ற கணக்கில் சமனில் முடிந்தது .இதையடுத்து நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில்  4-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணி அபார வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Categories

Tech |