Categories
விளையாட்டு ஹாக்கி

ஆசிய கோப்பை ஹாக்கி :பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா….!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடந்த  ஆட்டத்தில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் லீக்  சுற்று முடிவில் இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து  அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதின .இதில் ஜப்பான் அணி 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது இதன் மூலம் ஜப்பான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது .

இதையடுத்து நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தென்கொரியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 6-5 என்ற கோல் கணக்கில் தென்கொரியா அணி வெற்றி பெற்றது .இந்நிலையில்  வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியாக  4-3  என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

Categories

Tech |