ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் , இந்திய வீராங்கனையான மேரி கோம் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 -க்கும் மேற்பட்ட வீரர் , வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பெண்களுக்கான (51 கிலோ) எடை பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம், கஜகஸ்தான் வீராங்கனையான நாஜிம் கிசாய்பேவுடன் மோதினார். இதில் 2-3 என்ற கணக்கில் மேரிகோம் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தார். இதனால் அவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.