ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தங்கப் பதக்கத்தை வென்றார்.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர் .இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் (75 கிலோ) எடை பிரிவுக்கான இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை பூஜா ராணி, உஸ்பெகிஸ்தான் வீராங்கனையான மவ்லுடா மோவ்லோனோவாவுடன் மோதினார்.
இதில் 5-0 என்ற கணக்கில் பூஜா ராணி வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன் நடந்த (51 கிலோ) எடைப் பிரிவுக்கான இறுதிச்சுற்றில், 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம், கஜகஸ்தான் வீராங்கனை நஸிம் கைஜாபாயுடன் மோதி ,தோல்வி அடைந்ததால் வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பினார் .