Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி ….! பதக்கங்களை குவிக்குமா இந்திய அணி …?

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ,இன்று முதல் 31-ஆம் தேதி வரை துபாயில் நடைபெற உள்ளது.

இந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, கஜகஸ்தான், ஈரான், தென்னாப்பிரிக்கா ,இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கிறது. இந்த சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் 31-ஆம் தேதி வரை துபாயில் நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் இந்திய அணியில் மொத்தமாக 19 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் அணியில் நடப்பு சாம்பியனான அமித் பன்ஹால் ,விகாஸ் கிருஷ்ணன் மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோரும் ,பெண்கள் அணியில் 6முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மேரிகோம், நடப்பு சாம்பியனான பூஜா ராணி , சிம்ரன்ஜித் கவுர் ஆகியோரும் பங்கேற்றனர். அத்துடன்  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்காக முக்கிய போட்டியாக இந்த  போட்டி அமைந்துள்ளதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய ஆண்கள் அணியின் உயர் செயல்பாட்டு இயக்குனரான சான்டியாகோ நிவா  கூறும்போது, ‘ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக, நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை, இந்த சாம்பியன்ஷிப் போட்டி வழங்கியுள்ளது.  இந்த போட்டிக்கு ஒலிம்பிக்கில் தகுதி பெற்றவர்களும், உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றவர்களும் பங்கு பெற்றுள்ளதால் , இந்த போட்டி மிகவும் சவாலாக இருக்கும் என்பதை அறிவோம். இந்த போட்டியில் நிச்சயமாக எங்களது அணி சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவிக்கும் என்று நம்புவதாக ‘ அவர் கூறினார். இந்தப்போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வெல்பவர்களுக்கு ரூபாய் 7¼  லட்சமும், வெள்ளிப் பதக்கம் பெறுவோருக்கு ரூபாய் 3½  லட்சமும், வெண்கலப் பதக்கத்தை பெறுவோருக்கு ரூபாய் ரூ.1¾ லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |