Categories
விளையாட்டு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வினேஷ் போகத் உட்பட 3 பேர் … தங்கப்பதக்கம் வென்று சாதனை …!!!

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியானது கஜகஸ்தான் நாட்டில் ,அல்மாதி நகரில் நடைபெற்றது   .

இந்த போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் , மெங் சுவான் ஹிசை(சீனதைபே) இருவரும்  மோதினார். இதில்  6-0 என்ற கணக்கில் வினேஷ் போகத், மெங் சுவான் ஹிசை தோல்வியடையச் செய்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதற்கு முன்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற விக்னேஷ் போகத் ,தற்போது ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கத்தை பெற்றிருப்பது, இதுவே முதல் முறையாகும். இதைத்தொடர்ந்து 57 கிலோ பிரிவினருக்கான போட்டி நடத்தப்பட்டது .

இதில் இந்தியாவின் அன்ஷூமாலிக்(வயது 19) மங்கோலியா நாட்டை சேர்ந்த அல்டான்செட்செக்கை  3-0 என்ற கணக்கில் ,தோல்வியடையச் செய்து தங்கப் பதக்கத்தை வென்றார். அதோடு 72 கிலோ பிரிவினருக்கான போட்டியில், இந்தியாவை சேர்ந்த திவ்யா கக்ரன்   கஜகஸ்தானை  சேர்ந்த ஜமீலாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதுபோல 65 கிலோ பிரிவினருக்கான போட்டியில் ,இந்தியாவை சேர்ந்த  சாக்‌ஷி மாலிக் ,மங்கோலியா நாட்டைச் சேர்ந்த போலோர்டுங்கலாக்கிடம் , 0-4 என்ற கணக்கில் , தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார். .

Categories

Tech |