Categories
விளையாட்டு

ஆசிய டேபிள் டென்னிஸ் :முன்னணி வீராங்கனை மனிகா பத்ரா நீக்கம்….!!!

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீராங்கனை மனிகா பத்ரா இடம்பெறவில்லை .

ஆசிய  டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற 22-ம் தேதி முதல் கத்தாரில் நடைபெற உள்ளது இதில் ஒற்றையர் ,இரட்டையர்  பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது .          இப்போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது இதில் மகளிர் அணியில் உலகத் தரவரிசையில் 56-வது இடத்தில் உள்ள முன்னணி வீராங்கனையான மனிகா பத்ரா இடம்பெறவில்லை .

இவர் சோனிபட்டில்  நடந்த தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்பதால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதில் இந்திய ஆடவர் அணியில் சத்யன், ஹர்மீத் தேசாய், சரத்கமல், மனவ் தக்கர் மற்றும் சனில் ஷெட்டி ஆகியோரும், மகளிர் அணியில் சுதிர்தா முகர்ஜி, ஸ்ரீஜா அகுலா, அஹிகா முகர்ஜி, அர்ச்சனா காமத் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

Categories

Tech |