தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் எல்லா பக்கமும் கலந்து இருக்கிறது. இன்னைக்கு தமிழ்நாட்டில் மிக முக்கியமான பிரச்சனை என்ன அப்படின்னு என்கிட்ட கேட்டீங்கன்னா ? ஒவ்வொருத்தரும் ஒன்னு ஒன்னு சொல்லலாம். ஒரு நூறு பேரை உட்கார வைத்து, என்ன தமிழ்நாட்டுடைய முக்கியமான பிரச்சனை ? என கேட்டீங்கன்னா… என்னை பொறுத்தவரை நூறுல 75 பேர் கட்டாயமாக ஊழல் என்று சொல்லுவார்கள். நிறைய சாமானிய மக்கள் நினைக்கலாம்…
அந்த ஊழலால் எனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே என நினைக்கலாம். உதாரணத்திற்கு நம்ம மண்டல தலைவர் அண்ணன், இங்குள்ள தனியார் நிறுவனத்தில் டாக்குமெண்டேஷன் வெரிஃபிகேஷன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். நம்ம மகேஷ் குமார் அண்ணா தனியார் நிறுவனத்திற்கு போறாரு,மகேஷ் குமார் அண்ணா வேலை செய்றாரு. அதற்கு மாத மாதம் சம்பளம் கொடுக்கிறாங்க. மகேஷ் குமார் அண்ணன் வீட்டில் குழந்தைகள் படிப்பாங்க.
இதுல நிறைய பொதுமக்கள் நம்ம கிட்ட கேக்குறாங்க. இதுல ஊழல் இருக்கு.. எனக்கு அதுல பாதிப்பு இல்லையே என 75 சதவீதம் பேர் கேட்பாங்க. 25% இதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நான் கார்ல போறேன், தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன். என் வேலையை நான் பாக்குறேன். தொழில் நடத்துறேன் அல்லது நான் விவசாயம் பாக்குறேன்.
ஆடு மாடு வச்சு தோட்டத்துல விவசாயம் பார்க்கிறேன். எனக்கு இந்த ஊழல்ல பிரச்சனை இல்லை என என நிறைய பேர் சொல்லுவாங்க. ஆனால் நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஊழலுடைய ஆழம் என்பது, ஒரு தலைமுறையை அழித்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கே தெரியாமல், ஒரு தலைமுறையை தமிழ்நாட்டில் அழிச்சாச்சு, ஊழலை வைத்து என விமர்சித்தார்.