பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பபெற பயணிகள் வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பயணசீட்டு கட்டணத்தை திரும்பப் பெற வங்கிக் கணக்கு விவரங்களை ரயில்வே நிர்வாகம் ஒருபோதும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை. மோசடி கும்பலை சேர்ந்த சிலர் இதுபோன்ற தகவல்களை தொலைபேசி வாயிலாக கேட்டு வருகின்றனர். ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக வங்கி ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், வங்கி ஏடிஎம் கார்டு ஆகியவற்றை தெரிவிக்க வேண்டாம்.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணைய தளத்தின் மூலம் பதிவு செய்த பயணிகள் கட்டண தொகை பயணம் புறப்படும்போது அவருடைய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ரயில்வே ஸ்டேஷனில் பதிவு செய்யப்படும் பயணிகளுக்கான கட்டணம் உரிய காலக்கெடுவில் ரயில்வே ஸ்டேஷன்களில் திரும்ப வழங்கப்படும். தனிநபர் வங்கி கணக்கு சம்பந்தமான விஷயங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டியதில்லை. இந்த தகவல் யாராவது தொலைபேசியில் கேட்டால் இது குறித்து ரயில்வே பயணியர் உதவி தொலைபேசி எண் 138 புகார் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.