Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சூதாட அனுமதி கேட்கீங்க…! ”உங்களை தடுக்குறோம் பாருங்க” கமல் பாய்ச்சல் …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை  வருகின்ற திங்கட்கிழமை நடைபெற இருக்கும் நிலையில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்ததும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்று அரசியல் கட்சியினர், தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று வலியுறுத்தி வந்தனர்.

kamal haasan: தரையில் கால் படாமல் ...

இந்த நிலையில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு மீது அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பதிவில், குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |