Categories
சினிமா தமிழ் சினிமா

வாக்குறுதிப்படி வலிமை அப்டேட்டை கேட்டுச் சொல்லுங்கள்…. வானதி சீனிவாசனிடம் தல ரசிகர்கள் கோரிக்கை…!!!

அஜித் ரசிகர்கள் வானதி சீனிவாசனிடம் வலிமை அப்டேட்டை தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்டை வெளியிடக்கோரி ரசிகர்கள் பலரும் பலரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் சமூக வலைதள பக்கத்தில் மூலமாக ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என்று கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன் ‘நான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி’ என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு தல ரசிகர்கள் வாழ்த்து கூறி, ‘நீங்கள் அளித்த வாக்குறுதிப்படி வலிமை அப்டேட்டை சீக்கிரம் கேட்டு சொல்லுங்கள்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |