அமெரிக்காவில் உலக அளவில் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய இரு இடங்களில் 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அதிகாலை 5 மணி அளவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடைபெற்றது. இந்த விருதானது உலக அளவில் திரைத்துறையில் சிறந்து விளங்குவார்களுக்கு ஆண்டுதோறும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்கர் விருதைப் பெறுவதற்காக சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கப்பட்டனர். மேலும் பல்வேறு துறையில் சிறந்து விளங்குவார்கள் விருதானது வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறந்த இயக்குனர் விருதை Nomadland படத்துக்காக க்ளோயி சாவ் என்ற சீனப் பெண் இயக்குனர் பெற்றுள்ளார். மேலும் சிறந்த துணை நடிகை விருதை Judas and the Black Messiah படத்துக்காக டேனியல் கல்லூயா என்ற பெண் பெற்றுச் சென்றார்.பின்னர் சிறந்த திரைக்கதைக்கான விருதை Promising Young Woman படத்துக்காக எமரால்டு பென்னல் பெற்றுளார்.
அதன் பிறகு சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை The Father படத்துக்காக கிறிஸ்டோபர் புளோரியன்க்கு வழங்கபட்டது . மேலும் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதை Another Round அளிக்கப்பட்டது. இது போல தொடர்ந்து பல்வேறு பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சியானது ஆஸ்கர் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆஸ்கர் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது.