Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்விம்மிங் பூல்”-க்கு பணம் கேட்டு… மாஸ்டர் பிளான் போடுங்க… ஸ்டாலினுக்கு பாஜக ஐடியா …!!

தமிழக அரசு ஸ்பெஷல் மாஸ்டர் பிளான் போட்டு,  முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என பாஜக தலைவர் ஐடியா கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய பாரத பிரதமர் அவர்கள், ஒரு லட்சம் கோடி ரூபாய் விவசாய உள்கட்டமைப்பு நிதியாக ஒதுக்கி இருக்கின்றார். அது தமிழகத்தில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் கோடிக்கு மேல…  6 ஆயிரம் கோடி கிட்ட வருகிறது. அதில் இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு எடுத்து செய்திருக்கக் கூடிய பணி என்பது வெறும் 123 கோடி ரூபாய்க்கு தான் இருக்கிறது.

ஒரு விவசாய நண்பர்களுக்கு இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி, கோல்ட் செயின் ஸ்டோரேஜ், விவசாய நண்பர்களுக்கு குளிர் பதனுட்டப்பட்ட அறை, அவர்களுக்கு தேவையான கோல்டு செயின் ஸ்டோரேஜ்சை உருவாக்க வேண்டும். இது அனைத்துமே இந்த உள்கட்டமைப்பில் வருகிறது. அதை தமிழக அரசு உடனடியாக எல்லா தாலுகாவில் இதற்காக ஸ்பெஷல் மாஸ்டர் பிளான் போட்டு, அதை முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி,

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5,900 கோடியும் தமிழக விவசாயிகளுக்கு வரவேண்டிய பணம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செய்ய வேண்டும். இதே பிரச்சினை தான் கேலோ இந்தியாவில் நடக்கிறது. கேலோ இந்தியாவில் குஜராத், ஒரு விளையாட்டு ஸ்டேடியம் கட்ட வேண்டும் என்று ப்ரோபோசல் கொடுக்கிறார்கள், தமிழக அரசு ஸ்விம்மிங் கூல் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

எந்த மாநில அரசு நான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று, ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை தயார் செய்து விளக்கமான அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுக்கிறார்களோ, அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்படும். ஆனால் தமிழ்நாடு எனக்கு ஸ்விம்மிங் கூல் கட்டுவதற்கு பணம் கொடு என்று கேட்கும் போது, குஜராத் மாநிலம் எனக்கு ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம் கட்டுவதற்கு பணம் கொடுங்கள் என்று கேட்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |