ரதாபாரி தொகுதியின் 149வது வாக்குச்சாவடியில் கலவரம் ஏற்பட்டதால் மீண்டும் மறுவாக்குப்பதிவு வருகின்ற 20-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவில் சில இடங்களில் பலத்த கட்டுப்பாடுகளையும் மீறி சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ரதாபாரி தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளரின் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டுபிடித்ததால் மிகப்பெரிய கலவரம் கிளம்பியது.
இச்சம்பவம் நடைபெற்ற லதாபாரி தொகுதியின் 149-வது வாக்குச்சாவடியில் வருகின்ற 20-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று நேற்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதுபோலவே ஹப்லாங் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்கள் மட்டுமே இருந்த நிலையில், அங்கு இரண்டு மடங்காக வாக்குகள் பதிவாகி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அந்த வாக்குச் சாவடியிலும் 20-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இதேபோன்று கலவரம் ஏற்பட்ட 4 வாக்குச்சாவடிகளில் மீண்டும் 20-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிடப்பட்டுள்ளது.