அசாமில் சில இளைஞர்கள் ஒரு இளம்பெண்ணை துன்புறுத்தி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
பெண்கள் ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்புவது என்பது மிகவும் கடினமாக மாறிவிட்டது. ஏனெனில் வீட்டை விட்டு வெளியில் சென்ற பெண்களை கடத்திக் கொண்டு சென்று கற்பழித்தல், கூட்டாக சேர்ந்து கற்பழித்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுதல் போன்ற சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. தற்போது இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையிலும் கூட இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
அசாமில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அசாம் மாநிலத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் சிலர் துன்புறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஐந்து ஆண்கள் ஒன்று சேர்ந்து அப்பெண்ணை தாக்கி கூட்டுப்பாலியல் செய்கின்றனர். சம்பவம் நடந்த இடம் வீடியோவில் தெளிவாக பதிவாகவில்லை. இந்நிலையில், குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அசாம் போலீஸ் தெரிவித்துள்ளனர்.