Categories
தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொலை… ராணுவ வீரர்கள் படுகாயம்..!!

அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் அமைதிபாதைக்கு திரும்ப வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்ற உல்பா (ஐ) அமைப்பினர் 3 மாத காலத்திற்கு எந்தவித தாக்குதலையும் ஏற்படுத்த மாட்டோம் என்று கூறியிருந்தனர். ஆனால் வேறு சில அமைப்புகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கர்பி அங்கிலாங் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான அதிகாரிகள் கூட்டு குழுவாக இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதை தொடர்ந்து அசாம்-நாகலாந்து எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தேசிய விடுதலை ராணுவம் என்ற அமைப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 4 ஏகே47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |