Categories
தேசிய செய்திகள்

கொலை திட்டம்…? – போராட்ட களத்தில் பெரும் பதற்றம்…!!

போராட்டக்களத்தில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து  நடத்தி வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசுடன் 11 முறை விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து போராட்டக்களத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த நபரை விசாரித்த போது அவர் விவசாயிகள் நடத்தவுள்ள போராட்டத்தை கலைக்கவும், விவசாய சங்க தலைவர்களை கொல்லவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி உள்ளது.

Categories

Tech |