தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் எஸ்பி வேலுமணி தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கு போன்றவைகளை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பின் நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணையின் போது ஒளிவு மறைவின்றி டெண்டர் விடப்பட்ட தாகவும், இதில் எனக்கு எவ்வித பங்கும் கிடையாது என்றும் எஸ்.பி வேலுமணி தரப்பில் கூறப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள் சொத்து குவிப்பு வழக்கு மற்றும் டெண்டர் முறைகேடு தொடர்பான 2 வழக்குகளையும் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி டெண்டர் முறைகேடு வழக்கை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என நீதிபதி திட்டவட்டமாக கூறியதோடு, எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்திருந்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.